ஆட்டோமொபைல்
க்விட் ஃபேஸ்லிஃப்ட்

க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2019-09-25 09:19 GMT   |   Update On 2019-09-25 09:19 GMT
ரெனால்ட் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல்களின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.



ரெனால்ட் நிறுவனத்தின் க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல்கள் அக்டோபர் மாத துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் ரெனால்ட் டஸ்டர் மேம்பட்ட மாடல் அறிமுகம் செய்யப்பட்டு, சமீபத்தில் டிரைபர் மாடலும் அப்டேட் செய்யப்பட்டது. 

2015 ஆம் ஆண்டுக்கு பின் க்விட் மாடல் தற்சமயம் மேம்படுத்தப்பட இருக்கிறது. புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. வேரியண்ட்கள் பற்றிய விவரங்கள் வெளியாகவில்லை. 

எனினும் புதிய காரில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், முன்புற கிரில், புதிய வடிவமைப்பு கொண்ட பம்ப்பர், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர புதிய க்விட் மாடலில் மேம்பட்ட டிரைபர் காரில் வழங்கப்பட்ட அம்சங்களையும் எதிர்பார்க்கலாம்.



ரெனால்ட் க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 8.0 இன்ச் தொடுதிரை வசதி, ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் வழங்கப்படலாம். இத்துடன் புதிய காரில் பாதுகாப்பு அம்சங்களும் மேம்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

புதிய க்விட் காரில் மெக்கானிக்கல் மாற்றங்கள் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது. புதிய க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல்: 0.08 லிட்டர் என்ஜின் மற்றும் 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படலாம். இரு என்ஜின்களும் முறையே 54 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 68 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது.

ரெனால்ட் என்ஜின்கள் பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் வகையில் அப்டேட் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தற்சமயம் ரெனால்ட் க்விட் மாடல் ரூ. 2.76 லட்சம் விலையில் துவங்கி ரூ. 4.75 லட்சம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் க்விட் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விலை ரூ. 3 லட்சத்தில் துவங்கி ரூ. 5 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம்.
Tags:    

Similar News