செய்திகள்
கோப்புபடம்.

வரிகளை திரும்ப அளிக்க முடிவு-திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி

Published On 2021-07-15 12:33 GMT   |   Update On 2021-07-15 12:33 GMT
ஊரக இளைஞர்கள், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், பெண் தொழிலாளர்கள்,சிறு, குறு தொழில் முனைவோர் என பல தரப்பினர் ஏற்றம் பெறுவர்.
திருப்பூர்:

ஏற்றுமதி வர்த்தகத்தில் செலுத்தப்பட்ட வரிகளை திரும்ப தரும் வகையில் ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல். என்ற நடைமுறை அமலில் இருந்தது. இதன்படி ஆடை ரகங்கள், ஏற்றுமதி அளவு ஆகியவற்றின் அடிப் படையில் 3.8 முதல் 6 சதவீதம் வரை ஏற்றுமதியாளர்களுக்கு  வரிகள் திரும்ப  அளிக்கப் பட்டு வந்தது.

சமீபத்தில் இதில் பெயரை மாற்றம் செய்தும், நடைமுறையில் சில மாற்றங்கள் செய்ய வும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதை யடுத்து கடந்த ஜனவரி முதல் வரிகள் திரும்ப அளிக்கப்படவில்லை.
 
தற்போது முந்தைய பெயருடன் (ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்.) அதே நடவடிக்கை 2024 மார்ச் 31-ந்தேதி வரை தொடரும் என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனை திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
இது குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) தலைவர் சக்திவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் முடிவால் இந்திய ஜவுளித்துறை வரும் 3 ஆண்டுகளில் 7.3 லட்சம் கோடி ரூபாய் என்ற  ஏற்றுமதி இலக்கை எட்டும். மேலும் புதிய ஏற்றுமதியாளர்களுக்கு நல்ல வாய்ப்பு. 

பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, ஊரக இளைஞர்கள், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், பெண் தொழிலாளர்கள்,சிறு, குறு தொழில் முனைவோர் என பல தரப்பினர் ஏற்றம் பெறுவர். 

சர்வதேச போட்டிகளால் சரிவை  சந்தித்து வரும் இந்திய ஜவுளி துறை மீண்டெழும் என தெரிவித்துள்ளார்.  

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜனவரி முதல் இதில் நிலவிய குழப்பத்துக்கு  தீர்வு காணப்பட்டுள்ளதோடு, 2024 மார்ச் வரை இதை  நீட்டிப்பு செய்துள்ளது ஏற்றுமதி வர்த்தகத்திற்கு பெரும் வாய்ப்பாக உள்ளது. 

பொதுவாக 4 முதல் 6 மாதம் முன்பாக ஆர்டர்களை பெறும் ஏற்றுமதியாளர்களுக்கு உற்பத்தி செலவை கணக்கிட மிகவும் ஏதுவாக அமையும் என தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News