செய்திகள்
வைரல் வீடியோ ஸ்கிரீன்ஷாட்

மாட்டு சானம் கொரோனா பாதிப்பை சரி செய்யுமா?

Published On 2021-05-18 05:15 GMT   |   Update On 2021-05-18 05:15 GMT
மாட்டு சானம் மற்றும் கோமித்தை கலந்து உடலில் பூசி கொண்டு யோகா பயிற்சி செய்வதை பலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

குஜராத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலானது. வைரல் வீடியோவில் சிலர் உடல் முழுக்க மாட்டு சானம் பூசிக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இவ்வாறு செய்வதால் கொரோனா தொற்று சரியாகிவிடும் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

மருந்து நிறுவன ஊழியரான கௌதம் மனிலால் பொரிசா மாட்டு சானத்தை உடலில் பூசிக்கொண்டதால் கடந்த ஆண்டு தனக்கு கொரோனா தொற்று சரியானதாக தெரிவிக்கிறார். மேலும், மருத்துவர்களும் இங்கு வருவதாக அவர் தெரிவித்தார். இவ்வாறு செய்வதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாக இவர்கள் நம்புகின்றனர்.



ஆமதாபாத் பகுதியை சேர்ந்தவர்கள் மாட்டு சானம் மற்றும் கோமியத்தை கலந்து அதனை தங்களது உடல் முழுக்க பூசிக் கொண்டு, யோகா பயிற்சிக்கு பின் பால் அல்லது மோர் கொண்டு உடலை கழுவுகின்றனர். எனினும், இவ்வாறு செய்வதால் கொரோனா சரியாகும் என இதுவரை நிரூபிக்கப்படவில்லை என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த வகையில் மாட்டு சானத்தை உடலில் பூசிக் கொண்டால் கொரோனா தொற்று சரியாகும் என்ற தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது. உண்மையில் இவ்வாறு செய்யும் போது உடலில் வேறு பக்கவிளைவுகள் ஏற்படும்.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News