தொழில்நுட்பம்
எல்ஜி ஸ்மார்ட்போன்

பட்ஜெட் விலையில் மூன்று எல்ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

Published On 2020-11-08 03:45 GMT   |   Update On 2020-11-07 12:15 GMT
எல்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.


எல்ஜி நிறுவனம் இந்திய சந்தையில் டபிள்யூ11, டபிள்யூ31 மற்றும் டபிள்யூ31 பிளஸ் என மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. 

இவற்றில் 6.52 இன்ச் ஹெச்டி பிளஸ் புல் விஷன் ஸ்கிரீன், 8 எம்பி செல்பி கேமரா, ஆண்ட்ராய்டு 10 ஒஎஸ், மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கின்றன.



எல்ஜி டபிள்யூ31 மற்றும் டபிள்யூ31 பிளஸ் மாடல்களில் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. எல்ஜி டபிள்யூ11 மாடலில் 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.

எல்ஜி டபிள்யூ31 மாடலில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. மூன்று டபிள்யூ சீரிஸ் மாடல்களிலும் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் பிராசஸர் வழங்கப்பட்டு உள்ளது.

இந்திய சந்தையில் எல்ஜி டபிள்யூ11, டபிள்யூ31 மற்றும் டபிள்யூ31 பிளஸ் மாடல்கள் மிட்நைட் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 9490, ரூ. 10,990 மற்றும் ரூ. 11,990 என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
Tags:    

Similar News