ஆன்மிகம்
பெருமாள்

துயர் தீர்க்கும் வாமன ஏகாதசி விரதம்

Published On 2020-09-07 07:11 GMT   |   Update On 2020-09-07 07:11 GMT
வாமன ஏகாதசி அன்று மேற்கொள்ளும் உலகளந்த பெருமாள் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மன நலமும் உடல் நலமும் அருளும் இந்த ஏகாதசி திதியின் சிறப்புகளைப் புராணங்கள் போற்றுகின்றன.
துயர் தீர்க்கும் வாமன ஏகாதசி விரதம். வாமன ஏகாதசி அன்று மேற்கொள்ளும் உலகளந்த பெருமாள் வழிபாடு மிகவும் சிறப்பு வாய்ந்தது. மன நலமும் உடல் நலமும் அருளும் இந்த ஏகாதசி திதியின் சிறப்புகளைப் புராணங்கள்  போற்றுகின்றன.

ஆவணி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசிக்கு பரிவர்த்தினி ஏகாதசி என்றும் வாமன ஏகாதசி என்றும் பெயர். வாமன அவதாரம் நிகழ்ந்தது ஆவணி மாத ஏகாதசி நாளில் என்பதால் இந்த ஏகாதசிக்கு வாமன ஏகாதசி என்னும் பெயர் வாய்த்தது. பொதுவாகவே ஏகாதசி திதி மிகவும் மகிமை நிறைந்த விரதநாளாகக் கருதப்படுவது.

அதிலும் வாமன ஜயந்தியும் இணைந்து வரும் இந்த நன்னாள் பன்மடங்கு புண்ணியங்களை அருளும் நாளாகக் கருதப்படுகிறது. இந்த நாளின் சிறப்புகளை பகவான் கிருஷ்ணரே யுதிஷ்ட்டிரருக்கு எடுத்துச் சொல்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.
Tags:    

Similar News