செய்திகள்
கோப்புபடம்

இங்கு வெற்றி பெற்ற கட்சி தான் ஆட்சி அமைக்கும் - ராமநாதபுரம் தொகுதி சென்டிமெண்ட் பலித்தது

Published On 2021-05-03 08:42 GMT   |   Update On 2021-05-03 08:42 GMT
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறும் கட்சி தான் தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்க கூடியதாக கடந்த காலங்களில் இருந்து வருகிறது.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெறும் கட்சி தான் தமிழகத்தில் ஆட்சியை தீர்மானிக்க கூடியதாக கடந்த காலங்களில் இருந்து வருகிறது. அது இந்த தேர்தலிலும் பலித்துள்ளது. 1967-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் போட்டியிட்ட தங்கப்பன் வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சி அமைத்தது. 1971-ல் இங்கு சத்தியேந்திரன் (தி.மு.க.), 1977-ல் ராமசாமி (அ.தி.மு.க.), 1980-ல் ராமசாமி (அ.தி.மு.க.), 1984-ல் ராமசாமி (அ.தி.மு.க.), 1989-ல் ராஜேந்திரன் (தி.மு.க.), 1991-ல் தென்னவன் (அ.தி.மு.க.), 1996-ல் ரகுமான்கான் (தி.மு.க.), 2001-ல் அன்வர்ராஜா (அ.தி.மு.க.) ஆகியோர் வெற்றி பெற்று அந்தந்த கட்சிகள் ஆட்சியை பிடித்தன. 2006-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹசன் அலி தி.மு.க. கூட்டணியில் வெற்றி பெற்றார். அப்போது தி.மு.க. ஆட்சி அமைத்தது.

2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆதரவுடன் ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி) போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது. 2016-ம் ஆண்டு மணிகண்டன் அ.தி.மு.க. வெற்றி பெற்றார். அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது.


அதேபோன்று இந்த தேர்தலிலும் ராமநாதபுரம் தொகுதியில் காதர் பாட்சா முத்துராமலிங்கம் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்த தேர்தலிலும் தி.மு.க. ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News