செய்திகள்

ஐபிஎல்: 16 வயது 157 நாட்களில் அறிமுகமாகி ஆர்சிபி வீரர் பிரயாஸ் பர்மன் சாதனை

Published On 2019-03-31 11:42 GMT   |   Update On 2019-03-31 11:42 GMT
ஐபிஎல் தொடரில் மிகவும் இளம் வயதிலேயே அறிமுகம் ஆகிய வீரர் என்ற சாதனையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பிரயாஸ் பர்மன் படைத்துள்ளார். #IPL2019 #RCB
ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டம் ஐதராபாத் ராஜிவ்காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதி வருகின்றன.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் சுழற்பந்து வீச்சாளர் பிரயாஸ் ரெய் பர்மன் இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் முதன்றையாக ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறார். அவருக்கு 16 வயது, 157 நாட்களே ஆகிறது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் விளையாடிய மிகவும் இளம் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இதற்கு முன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜீப் உர் ரஹ்மான் 17 வயது, 11 நாட்களில் அறிமுகம் ஆனது சாதனையாக இருந்தது. சர்பிராஸ் அகமது 17 வயது 177 நாட்களிலும், பிரதீப் சங்வான் 17 வயது 179 நாட்களிலும், வாஷிங்டன் சுந்தர் 17 வயது 199 நாட்களிலும் அறிமுகமாகியுள்ளனர். 
Tags:    

Similar News