செய்திகள்
தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் முக்கியமான தலைநகரை கைப்பற்றிய தலிபான்கள்

Published On 2021-08-07 14:58 GMT   |   Update On 2021-08-07 15:33 GMT
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதற்கு பிறகு முதல் மாகாண தலைநகரை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.
காபூல்:

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாத அமைப்பினர் தாக்குதல்கள் நடத்தி பல பகுதிகளை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்துள்ளனர். மாகாணங்களில் உள்ள புறநகர் பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி இருக்கிறார்கள்.

தற்போது முக்கிய மாகாண தலைநகரங்களை கைப்பற்ற தலிபான்கள் முயற்சித்து வருகிறார்கள். தலிபான்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படையினர் கடுமையாக சண்டையிட்டு வருகிறார்கள்.

ஹெல்மெண்ட் மாகாண தலைநகர் லஷ்கர்காவில் இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.

இந்த நிலையில் முக்கிய மாகாண தலைநகர் ஒன்றை தலிபான்கள் தங்கள் வசம் கொண்டு வந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தென் மேற்கு பகுதியில் உள்ள நிம்ரோஸ் மாகாணத்தில் தலைநகர் ஜரஞ்சை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.

இது குறித்து அம்மாகாண துணை கவர்னர் ரோகுல் கைர்சாத் கூறும்போது, நிம்ரோசின் மாகாண தலைநகர் ஜரஞ்ச் நகரம் தலிபான்களிடம் வீழ்ந்துள்ளது என்றார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதற்கு பிறகு முதல் மாகாண தலைநகரை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.

இதற்கிடையே ஆப்கானிஸ்தான் அரசின் தகவல் தொடர்பு துறை தலைவரை தலிபான்கள் கொலை செய்துள்ளனர்.
Tags:    

Similar News