உள்ளூர் செய்திகள்
வழக்கு

கோயம்பேடு மோதல் விவகாரம்- விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 30 பேர் மீது வழக்கு

Published On 2022-04-15 09:47 GMT   |   Update On 2022-04-15 09:47 GMT
கோயம்பேட்டில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது பா.ஜனதா, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 30 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை:

கோயம்பேட்டில் நேற்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது பா.ஜனதா, விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. கல்வீச்சில் சிலருக்கு காயமும் ஏற்பட்டது.

மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நேரிசலும் ஏற்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுமார் 30 நபர்கள் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வீச்சில் காயம் அடைந்த ஆதம்பாக்கத்தை சேர்ந்த பா.ஜனதா நிர்வாகி ஹரிகிருஷ்ணன் கொடுத்துள்ள புகாரில், ‘அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த போது விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த தொண்டர்கள் பா.ஜனதா கட்சியின் கொடியை பிடுங்கி தன்னை நெற்றியில் தாக்கியதாகவும், இதில் ரத்தக்காயம் ஏற்பட்டு கே.எம்.சி. மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் பல தொண்டர்களை விடுதலை சிறுத்தை கட்சி தொண்டர்கள் தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் சுமார் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News