செய்திகள்
சேகர் பாபு

கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது: சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார் சேகர் பாபு

Published On 2021-09-13 07:47 GMT   |   Update On 2021-09-13 07:47 GMT
இந்து அறநிலைத்துறையின் கீழ் உள்ள ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்கும் பணியில் தி.மு.க. அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இந்து அறநிலைத்துறையின் கீழ் ஏராளமான கோயில்கள்  உள்ளன. அந்த கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. குத்தகை மூலம் கிடைக்கும் வருமானங்கள் சரியான முறையில் பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டும், கோயில் நிலங்கள் முறைகேடாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

தி.மு.க. ஆட்சியமைத்ததும் கோயில் நிலங்கள் குறித்த ஆவணங்கள் இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கைது செய்யும் வகையில் சட்ட திருத்தத்திற்கான சட்ட முன்வடிவை சட்டசபையில் தாக்கல் செய்தார் இந்து அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு.

இந்த சட்ட முன்வடிவில் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கடுமையான குற்றம். ஜாமினில் வெளிவர முடியாது. ஆக்கிரமிப்பு செய்பவர்களை கைது செய்ய முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News