செய்திகள்
கோப்புபடம்

வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 123-வது நாளாக போராட்டம்

Published On 2021-03-28 02:53 GMT   |   Update On 2021-03-28 02:53 GMT
மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், அரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியின் சிங்கு, டிக்கிரி, காசிப்பூர் எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தும் போராட்டம் இன்று 123-வது நாளை எட்டியுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் ஆதரவு தெரிவித்த நிலையில், மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை தங்களது போராட்டத்தை கைவிடப்போவது இல்லை என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. மறுபுறம் மத்திய அரசு வேளாண் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் எனவும், சட்டத்தை திரும்ப பெற இயலாது என்றும் திட்டவட்டமாக கூறி வருகிறது.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர விவசாயிகள் சங்கத்தினருக்கும், மத்திய அரசுக்கும் இடையே நடந்த 11 சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நெடுஞ்சாலையில் விவசாயிகள் போராட்டம் செய்வதால் 3 மாநிலங்களில் ரூ.815 கோடி சுங்க கட்டண இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து துறை மந்திரி நிதின் கட்கரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News