செய்திகள்
கோப்புப்படம்

டெல்லியில் புதிதாக 6,224 பேருக்கு கொரோனா தொற்று

Published On 2020-11-24 17:48 GMT   |   Update On 2020-11-24 17:48 GMT
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6 ஆயிரத்து 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட கொரோனா பாதிப்பு பற்றிய விவரம்:  டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 224 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தொற்று பாதிப்பில் இருந்து 4 ஆயிரத்து 943 பேர் குணம் அடைந்த நிலையில், 109 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய ஒரே நாளில் 61,381 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

டெல்லியில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 40 ஆயிரத்து 541 ஆக உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 93 ஆயிரத்து 419 ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன்  38,501 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் , தொற்று பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 621 ஆக உள்ளது
Tags:    

Similar News