செய்திகள்
சைனிக் பள்ளியில் சேர்ந்த மாணவிகள்.

உடுமலை சைனிக் பள்ளியில் முதல் முறையாக மாணவிகள் சேர்க்கை

Published On 2021-10-08 07:19 GMT   |   Update On 2021-10-08 07:19 GMT
பள்ளி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி, குதிரையேற்ற பயிற்சி, மலையேற்ற பயிற்சி, பாராசூட் பயிற்சி, கப்பல், விமான மாதிரிகளை அமைக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள அமராவதி நகரில் அமைந்துள்ள சைனிக் பள்ளி 1969-ம் ஆண்டு துவங்கப்பட்டது. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தின்கீழ் படித்து வரும் இப்பள்ளி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் பயிற்சி, குதிரையேற்றப் பயிற்சி, மலையேற்றப் பயிற்சி, பாராசூட் பயிற்சி, கப்பல், விமான மாதிரிகளை அமைக்கும் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

6ம் வகுப்பு, 9ம் வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் நுழைவுத் தேர்வுகளை நடத்தி சைனிக் பள்ளி நிர்வாகம் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல்முறையாக மாணவிகள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. இதன்படி 2021-22ம் கல்வி ஆண்டில் நுழைவுத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் 6 ம் வகுப்பில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்திருந்த 12 மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். பள்ளியில் சேர்ந்த மாணவிகளை ஆசிரியர்கள், அலுவலர்கள் வரவேற்றனர்.
Tags:    

Similar News