தொழில்நுட்பச் செய்திகள்
ரியல்மி யூ.ஐ 3.0

ரியல்மி வெளியிட்டுள்ள புதிய யூ.ஐ அப்டேட்- இதில் இத்தனை அம்சங்களா?

Published On 2022-03-31 06:20 GMT   |   Update On 2022-03-31 06:20 GMT
ரியல்மி 8 பயனர்கள் புதிய அப்டேட்டை பெற தங்களது ஸ்மார்ட்போனை RMX3085_11.A.24 அல்லது RMX3085_11.A.26 அப்டேட்டில் வைத்திருக்க வேண்டும்.
ரியல்மி நிறுவனம் ரியல்மி 8 ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டை அடிப்படியாக கொண்ட ரியல்மி யூ.ஐ 3.0 அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த புதிய அப்டேட் RMX3085_11.C.06 யூ.ஐ வெர்ஷனுடன் வருகிறது. மேலும் இதில் ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த புதிய அப்டேட்டில் மறு டிசைன் செய்யப்பட்ட ஐகான்களுடன் ஹோம் ஸ்க்ரீன் லேஅவுட் கொடுக்கப்பட்டுள்ளது. அது குவாண்டம் அனிமேஷன் இன்ஜின் 3.0-வை பயன்படுத்தியுள்ளது. இதன்மூலம் 300-க்கும் அதிகமான அனிமேஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த புதிய அப்டேட்டில் பேக்ரவுண்ட் ஸ்ட்ரீம் மோட் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் போன் லாக் ஆகி இருந்தாலும் ஆடியோ அல்லது வீடியோவை பேக்ரவுண்டில் பிளே செய்ய முடியும். மேலும் ரியல்மி புக் மற்றும் ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு இடையே பயனர்கள் எளிதாக மாறும் வகையில் இந்த அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.

ஃபிளெக்ஸிபிள் விண்டோஸ் என்ற அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் பயனர்கள் மை ஃபைல்களில் இருந்து ஃபைலை இழுத்து ஃப்ளோட்டிங் விண்டோவிற்கு கொண்டு வர முடியும். அதேபோல போட்டோ செயலிகளில் இருந்து போட்டோக்களையும் கொண்டு வர ஃப்லோட்டிங் விண்டோவிற்கு கொண்டு வர முடியும்.

இந்த புதிய படேட்டில் குயிக் லாஞ்ச் என்ற அம்சமும் இடம்பெற்றுள்ளது. இதன்மூலம் நமது ஸ்மார்ட்போன் நாம் அதிகம் பயன்படுத்தும் ஆப்களை அடையாளம் கண்டு ஓபன் செய்ய உதவுகிறது. இத்துடன் கேமராவில் உள்ள கஸ்டமிஷேஷன் ஆப்ஷன், புதிய ஜூம் ஸ்லைடர் ஆகிய பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ரியல்மி 8 பயனர்கள் புதிய அப்டேட்டை பெற தங்களது ஸ்மார்ட்போனை RMX3085_11.A.24 அல்லது RMX3085_11.A.26 அப்டேட்டில் வைத்திருக்க வேண்டும். இந்த புதிய அப்டேட் வெர்ஷன் RMX3085_11.C.06 என்ற பெயரை கொண்டுள்ளது. மேலும் இது ஒவ்வொரு பயனர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News