செய்திகள்
கோப்புபடம்.

அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் தொழிலாளர்கள் நீதித்துறையை நாடி உரிய நிவாரணம் பெறலாம் - நீதிபதி பேச்சு

Published On 2021-10-10 08:34 GMT   |   Update On 2021-10-10 08:34 GMT
திருப்பூர் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. தினமும் ஏராளமானோர் வேலை வாய்ப்புக்காக இங்கு வருகின்றனர்.
திருப்பூர்:

தேசிய சட்ட பணிகள் ஆணைக்குழுவின் வெள்ளி விழா ஆண்டு கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் திருப்பூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் தினமும் பல்வேறு பகுதிகளில் சட்ட விழிப்புணர்வு முகாம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து நடைபெற்று வருகிறது. 

ரெயில் நிலையம் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 

இதில் திருப்பூர் விரைவு கோர்ட் நீதிபதி ராமநாதன் பங்கேற்று பேசியதாவது:-

திருப்பூர் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதி. தினமும் ஏராளமானோர் வேலை வாய்ப்புக்காக இங்கு வருகின்றனர். இங்கு தங்கி பணியாற்றுகின்றனர். தொழிலாளர்களுக்கு நிறுவனங்கள் உரிய ஊதியம், பணிப் பாதுகாப்பு, வேலை நேரம் உள்ளிட்டவற்றை பின்பற்ற வேண்டும்.தொழிலாளர் நலச் சட்டங்கள் பின்பற்ற வேண்டும். 

இவ்வாறான அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும் போது, பாதிக்கப்படும் தொழிலாளர்கள் இலவச சட்ட உதவி பெறலாம். இதற்கென இயங்கும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவை அணுகி உரிய சட்டரீதியான நிவாரணம் பெறலாம். இவ்வாறு அவர் பேசினார். 
Tags:    

Similar News