ஆட்டோமொபைல்

அந்த தொழில்நுட்பத்துடன் வெளியான முதல் மோட்டார்சைக்கிள் இது தான்

Published On 2019-06-11 10:39 GMT   |   Update On 2019-06-11 10:39 GMT
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் மோட்டார்சைக்கிள் அந்த தொழில்நுட்பம் கொண்ட முதல் மாடலாக இருக்கிறது.



இந்தியாவின் முதல் பி.எஸ். VI ரக மோட்டார்சைக்கிள் அறிமுகமானது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் ஸ்பிளென்டர் ஐ ஸ்மார்ட் மாடல் இந்தியாவின் முதல் பி.எஸ். VI ரக மோட்டார்சைக்கிளாக இருக்கிறது. 

பி.எஸ். VI எமிஷன்கள் யூரோ VI புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கிறது. இதன் மூலம் இந்த விதிகளுக்கு பொருந்தும் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்.

ஏப்ரல் 1, 2020-க்கு பின் இந்தியாவில் விற்பனையாகும் அனைத்து வாகனங்களும் பி.எஸ். VI விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில் முதல் நிறுவனமாக ஹீரோ தனது மோட்டார்சைக்கிளில் புதிய விதகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கி இருக்கிறது.



ஹீரோ ஸ்பிளென்டர் ஐ ஸ்மார்ட் மாடலில் 109.15சிசி, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 8.98 பி,ஹெச்.பி. பவர் மற்றும் 9 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 4-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் விற்பனையாகும் மாடலில் கார்புரேட்டெட் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் புதிய பி.எஸ். VI மாடலில் கார்புரேட்டெட் என்ஜின் வழங்கப்படுமா என்பது பற்றி எவ்வித தகவலும் இல்லை. புதிய என்ஜின் தவிர புதிய மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. 
Tags:    

Similar News