செய்திகள்
கோப்புபடம்

மடத்துக்குளம் அருகே குறுகிய பாலத்தால் தவிக்கும் வாகன ஓட்டிகள்

Published On 2021-10-27 06:29 GMT   |   Update On 2021-10-27 06:29 GMT
கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய போக்குவரத்துக்கு தகுந்தபடி குறுகலாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
மடத்துக்குளம்:

மடத்துக்குளம் கணியூரிலிருந்து மைவாடி வழிதடத்தில் உடுமலை செல்லும் சாலையை 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். விவசாய நிலங்களுக்கு பல்வேறு இடுபொருட்கள் கொண்டு செல்வதோடு அறுவடை செய்த காய்கறிகள், தானியங்களை இந்த வழித்தடத்தில் எடுத்து வருகின்றனர்.

இது தவிர மைவாடி பகுதியில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் உள்ளன. அதற்காக இயக்கப்படும் கனரக வாகனங்களும் அரசு பஸ்களும் இந்த ரோட்டில் சென்று திரும்புகின்றன. இவ்வளவு பயன்பாடுள்ள சாலையில் செல்வபுரம் அருகே அமராவதி கிளை வாய்க்கால் மீது அமைக்கப்பட்டுள்ள பாலம் போக்குவரத்திற்கு போதுமானதாக இல்லை.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய போக்குவரத்துக்கு தகுந்தபடி குறுகலாக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கனரக வாகனம் மட்டுமே செல்லும் அளவில் தான் அகலம் உள்ளது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் விலகிச் செல்ல முடிவதில்லை.

இரவு நேரத்தில் இந்த வழித்தடத்தில் பயணிப்பவர்கள் கவனக்குறைவால் விபத்துக்கள் நடக்கிறது. இதற்குத் தீர்வாக தற்போதைய வாகன பயன்பாட்டிற்கும் தகுந்த அளவில் அகலமான பாலம் கட்டமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை வேண்டும் என்றனர். 
Tags:    

Similar News