செய்திகள்
கோப்புப்படம்

இலங்கையில் 3-வது அலையை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு

Published On 2021-05-12 22:50 GMT   |   Update On 2021-05-12 22:50 GMT
இலங்கையில் கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. அதிகமானவர்கள் பாதிக்கப்படுவதுடன், இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
கொழும்பு:

இலங்கையில் கொரோனா 3-வது அலை பரவி வருகிறது. அதிகமானவர்கள் பாதிக்கப்படுவதுடன், இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இதையடுத்து அங்கு நாடு முழுவதும் நேற்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு நேர வாகனப் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மே 31-ந் தேதி வரை அமலில் இருக்கும்.

இலங்கையில் கடந்த 10 நாட்களில் 149 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை அங்கு 1 லட்சத்து 31 ஆயிரத்து 98 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 850 பேர் பலியாகி உள்ளனர்.
Tags:    

Similar News