செய்திகள்
திருப்பூரில் பஸ் கண்டக்டருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட காட்சி.

எச்சில் தொட்டு டிக்கெட் வழங்கிய அரசு பஸ் கண்டக்டருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2021-07-16 10:23 GMT   |   Update On 2021-07-16 10:23 GMT
கொரோனா பரி சோதனை முடிவில் அவ ருக்கு தொற்று உள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும்.
திருப்பூர்:

கொரோனா பரவல் குறைய தொடங்கியதால் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பொது போக்கு வரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும் தொற்றின் எண்ணிக்கை அதிகரிக்காத வகையில் சில கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை கோவையில் இருந்து திருப்பூருக்கு அரசு பஸ் ஒன்று 57 பயணிகளுடன் புறப்பட்டு வந்தது. பேருந்தில் பஸ் கண்டக்டர் பயணிகளுக்கு டிக்கெட் வழங்கும்போது, எச்சில் தொட்டு கிழித்து டிக்கெட்டை வழங்கியுள்ளார். இதை பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். 

கொரோனா காலகட்டம்என்பதால் இதுபோல எச்சில் தொட்டு டிக்கெட் கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளனர். அதனை பொருட் படுத்தாமல் கண்டக்டர் மீண்டும் மீண்டும் அதேபோல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பயணி ஒருவர் திருப்பூர் சுகாதாரதுறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
 
இதையடுத்து சுகாதாரத் துறையினர் பஸ் திருப்பூர் வந்தடைவதற்கு முன்பாகவே, கொரோனா பரிசோதனை செய்யும் பணியாளர்களுடன் தயார் நிலையில் இருந்தனர். திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே பஸ் வந்ததும், கண்டக்டருக்கு அங்கேயே வைத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா பரி சோதனை முடிவில் அவருக்கு தொற்று உள்ளதா? இல்லையா? என்பது தெரியவரும். இதனால் பயணிகள் பீதியுடன் பஸ்சில் இருந்து இறங்கி சென்றனர். மேலும் கொரோனா காலங்களில் கண்டக்டர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று சுகாதாரதுறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது.
Tags:    

Similar News