செய்திகள்
மந்திரி சுதாகர்

பொதுமக்கள் சரியான தகவல்களை வழங்க வேண்டும்: மந்திரி சுதாகர் வேண்டுகோள்

Published On 2020-10-21 01:52 GMT   |   Update On 2020-10-21 01:52 GMT
கொரோனா பரிசோதனை செய்து கொள்கிறவர்களில் சிலர், தவறான தகவல்களை வழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதன் மூலம் அவர்கள் தங்கள் குடும்பத்தினரின் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறார்கள் என்று மந்திரி சுதாகர் கூறியுள்ளார்.
பெங்களூரு :

மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடகத்தில் சில தனியார் மருத்துவமனைகள் இடைத்தரகர்கள் மூலம் படுக்கைகளை ஒதுக்குவதாக புகார்கள் வந்துள்ளன. மக்களை ஏமாற்ற முயற்சி செய்யும் இத்தகைய மருத்துவமனைகள் மற்றும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய புகார்கள் இருந்தால் அதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு பொதுமக்கள் கொண்டுவர வேண்டும். கொரோனா பரிசோதனை செய்து கொள்கிறவர்களில் சிலர், தவறான தகவல்களை வழங்குவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதன் மூலம் அவர்கள் தங்கள் குடும்பத்தினரின் உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். இதை தடுக்க பொதுமக்கள் சரியான தகவல்களை வழங்க வேண்டும். பொதுமக்கள் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பிக்க முகக்கவசம் அணிவது, சானிடைசர் கொண்டு கைகளை கழுவுவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு சுதாகர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News