செய்திகள்
கோப்புப்படம்

விழுப்புரம் மாவட்டத்தில் புதிய உச்சம் : ஒரே நாளில் 298 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-04-29 17:37 GMT   |   Update On 2021-04-29 17:37 GMT
கொரோனா 2 வது அலை பரவிலில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்கத்தில் இரட்டை இலக்கதில் பாதிப்புகள் பதிவாகி வந்தது.
விழுப்புரம்:

கொரோனா 2 வது அலை பரவிலில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடக்கத்தில் இரட்டை இலக்கதில் பாதிப்புகள் பதிவாகி வந்தது. இதில் கடந்த 17-ந் தேதி ஒரு நாள் கொரோனா பாதிப்பு 100-ஐ தாண்டியது. அதிலிருந்து கொரோனா தொற்று குறையாமல் கடந்த 10 நாட்களாக ஒவ்வொரு நாளும் புதுப்புது உச்சத்தை தொட்டது.

அந்த வகையில் நேற்று புதிய உச்சமாக 298 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 18,182 ஆக உயர்ந்துள்ளது.

முதல் அலையின் போது கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்ச பாதிப்பு 234 ஆக தான் இருந்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.

இதற்கிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மேல்மருவத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திண்டிவனத்தை சேர்ந்த 59 வயதுடைய நபர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 121 ஆக அதிகரித்துள்ளது.

இதுதவிர நோய் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 112 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 16,586 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News