ஆன்மிகம்
சாரங்கபாணி கோவிலில் சயன கோலத்தில் பெருமாள்

சாரங்கபாணி கோவிலில் சயன கோலத்தில் பெருமாள்

Published On 2020-09-24 08:54 GMT   |   Update On 2020-09-24 08:54 GMT
சாரங்கபாணி கோவில் கருவறையில் ஐந்து தலை நாகத்தின் மீது பள்ளிகொண்டபடி சயன கோலத்தில் பெருமாள் வீற்றிருக்கிறார். உற்சவ பெருமாள், நின்ற கோலத்தில் அருள் வழங்குகிறார்.
கும்பகோணத்தில் உள்ள வைணவக் கோவில்கள் பலவற்றில், முதன்மையானதாக விளங்குகிறது, சாரங்கபாணி திருக்கோவில். ஏம முனிவர் என்பவர், திருமாலை நோக்கி கடுமையான தவம் புரிந்தார். அவர் முன்பாகத் தோன்றிய மகாவிஷ்ணு, “உனக்கு வேண்டிய வரங்களைத் தருகிறேன். நீ கும்பகோணம் சென்று அங்குள்ள அமுதவாவி தீர்த்தத்தில் நீராடி தவம் புரிந்து வா” என்று அருளினார். அதன் படியே ஏம முனிவரும், கும்பகோணம் வந்து தவம் செய்துகொண்டிருந்தார். அப்படி அவர் தவம் இருந்தபோது ஒரு நாள், அங்குள்ள குளத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர் மீது, ஒரு பெண் குழந்தை இருப்பதைக் கண்டார். அந்தக் குழந்தையை எடுத்து வந்து தன் மகளாக வளர்த்தார். ‘கோமளவல்லி’ என்று பெயரிடப்பட்ட அந்தப் பெண், ‘திருமாலை மணம் முடிக்க வேண்டும்’ என்ற எண்ணத்துடன் தவம் இயற்றத் தொடங்கினாள்.

கோமளவல்லியின் பக்திக்கு மனமிரங்கிய திருமால், ஏம முனிவருக்கு அருளாசி வழங்கியதோடு, கோமளவல்லியையும் மணந்துகொண்டார். இதன் நினைவாகவே இன்றளவும், இந்தக் கோவிலில் தை மாதம் நடைபெறும் விழாவின் 6-ம் நாளில், திருக்கல்யாாண உற்சவம் நடத்தப்படுகிறது. கருவறையில் ஐந்து தலை நாகத்தின் மீது பள்ளிகொண்டபடி சயன கோலத்தில் பெருமாள் வீற்றிருக்கிறார். உற்சவ பெருமாள், நின்ற கோலத்தில் அருள் வழங்குகிறார்.
Tags:    

Similar News