செய்திகள்
கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

அமீரகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 95 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தடுப்பூசி

Published On 2021-01-21 02:55 GMT   |   Update On 2021-01-21 02:55 GMT
அமீரகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது வேகமாக நடந்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில், 95 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
அபுதாபி:

அமீரக சுகாதாரம் மற்றும் தடுப்புத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அமீரகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியானது வேகமாக நடந்து வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில், 95 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை அமீரகத்தில் 21 லட்சத்து 60 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது 100 பேருக்கு 21.85 பேர் என்ற அளவில் போடப்பட்டு வருகிறது.

உலகில் கொரோனா தடுப்பூசியை போடுவதில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தை வகிக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 100 பேருக்கு 1.16 பேர் என்ற அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அமீரகத்தில் செயல்பட்டு வரும் தடுப்பூசி மையங்களுக்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அபுதாபி பகுதியில் வாகனத்தில் இருந்தபடியே தடுப்பூசி போட்டுக்கொள்ளும் முறை விரைவில் அறிமுகம் செய்யப்படும். இதன் மூலம் மக்கள் விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News