லைஃப்ஸ்டைல்
வாலி அரிசி இனிப்பு பொங்கல்

குதிரை வாலி அரிசி இனிப்பு பொங்கல்

Published On 2020-01-13 08:40 GMT   |   Update On 2020-01-13 08:40 GMT
பொங்கல் பண்டிகைக்கு சத்தான சுவையான பொங்கல் செய்ய விரும்பினால் குதிரை வாலி அரிசியில் செய்யலாம். இன்ற இந்த பொங்கலை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

குதிரை வாலி அரிசி- 3/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
உப்பு - தேவையான அளவு
வெல்லம் - 1 கப்
நெய்  - 2 டீஸ்பூன்
ஏலக்காய் - 2
முந்திரிப்பருப்பு - தேவையான அளவு
உலர் திராட்சை - 10 தேவையான அளவு
தண்ணீர்  - 1/4 கப் - வெல்லத்தை கரைப்பதற்கு



செய்முறை

ஏலக்காயை பொடித்து கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி சூடானதும் பாசிப்பருப்பை போட்டு நன்கு பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுக்கவும்.

குதிரைவாலி அரிசியை நன்கு கழுவி அதை வறுத்த பாசிப்பருப்பு, ஒரு சிட்டிகை உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் 4 விசில் வரை வைக்கவும்.

வெல்லத்தை நன்கு பொடித்து மிதமான சூட்டில் உள்ள தண்ணீர் சேர்த்து கரைக்கவும்.

நன்கு கரைந்த பின்பு வடிகட்டி, வடிகட்டிய கரைசலை வேக வைத்த குதிரை வாலி அரிசியுடன் சேர்த்து மிதமான சூட்டில் பொங்கல் பதம் வரும் வரை நன்கு கிளறவும்.

பொடித்த ஏலக்காயை சேர்க்கவும்.

மற்றொரு வாணலியில் மீதமுள்ள நெய் ஊற்றி முந்திரிப்பருப்பு, உலர் திராட்சை இட்டு நன்கு பொன்னிறம் ஆகும் வரை வறுத்து எடுத்து பொங்கலுடன் சேர்த்து கிளறவும்.

சுவையான குதிரை வாலி அரிசி இனிப்பு பொங்கல் தயார்..

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News