ஆட்டோமொபைல்
ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய வெளியீட்டு விவரம்

Published On 2020-09-07 06:24 GMT   |   Update On 2020-09-07 06:24 GMT
ஹஸ்க்வர்னா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் இந்திய வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.

ஹஸ்க்வர்னா நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

புதிய ஹஸ்க்வர்னா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 4கிலோவாட் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் செட்டாக் மாடல் உருவான பிளாட்பார்மில் உருவாக இருக்கிறது. 



இதனால் புதிய ஸ்கூட்டர் சிறப்பான செயல்திறன் மற்றும் அதிக தூரம் செல்லும் திறன் கொண்டிருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்கூட்டர் பஜாஜ் நிறுவனம் சக்கன் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டுமின்றி உலகின் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
Tags:    

Similar News