ஆன்மிகம்
முக்குறுணி விநாயகர்

மீனாட்சி அம்மன் ஆலயத்தில் முக்குறுணி விநாயகர் தோன்றிய வரலாறு

Published On 2021-05-02 02:37 GMT   |   Update On 2021-05-02 02:37 GMT
மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ‘முக்குறுணி விநாயகர்’ தெற்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முக்குறுணி விநாயகர் பிரதிஷ்டை செய்ததற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.
திருமலை நாயக்கர், மதுரையை ஆட்சி செய்த காலகட்டம் அது. அந்த மன்னனுக்கு தீராத வயிற்று வலி உண்டானது. பல வைத்தியங்களைப் பார்த்தும், அது சரியாகவில்லை. எனவே தன்னுடைய வயிற்றுவலி நீங்கினால், மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு ஒரு தெப்பக் குளம் கட்டித்தருவதாக வேண்டிக்கொண்டார்.

வேண்டுதல் நிறைவேறியதும், தெப்பக் குளம் அமைக்கும் பணி தொடங்கியது. குளம் தோண்டும் பணியின் போது, நிலத்துக்குள் இருந்து பிரமாண்டமான விநாயகர் சிலை கிடைத்தது. அவரை மூலவர் சன்னிதிக்கு செல்லும் வழியில் தெற்கு நோக்கியபடி பிரதிஷ்டை செய்தனர்.

இவரே ‘முக்குறுணி விநாயகர்.’ இவருக்கு விநாயகர் சதுர்த்தி நாளில், 18 படி அரிசியில் ஒரே கொழுக்கட்டையாக செய்து படைப்பது வழக்கமாக உள்ளது.

Tags:    

Similar News