செய்திகள்
கோப்புபடம்.

உடுமலை தங்கம்மாள் ஓடையில் வெள்ளத்தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் தீவிரம்

Published On 2021-10-28 07:15 GMT   |   Update On 2021-10-28 07:15 GMT
முழுமையாக ஓடையின் நீர் வழித்தடம் மீட்கப்படாமல், பெயரளவிற்கு பணி மேற்கொள்ளப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
உடுமலை:

உடுமலை நகரின் முக்கிய மழை நீர் ஓடையாக இருந்த தங்கம்மாள் ஓடை  ஆக்கிரமிப்புகளால் சுருங்கி கழிவு நீர் கலந்து சாக்கடையாக மாறியது. நகர குடியிருப்புகளை ஒட்டி அமைந்துள்ள இந்த ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அகற்றப்பட்டன. அதே போல் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து ஓடையை ஒட்டி வரும் ரோடு அகலப்படுத்தும் பணிக்காக மத்திய அரசு நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கியது. 

இந்நிலையில் முழுமையாக ஓடையின் நீர் வழித்தடம் மீட்கப்படாமல், பெயரளவிற்கு பணி மேற்கொள்ளப்படுகிறது. ஓடை அகலம் அதிகமாக இருக்கும் நிலையில் நீர் வழித்தடத்தை குறுக்கியும் வளைவுகளுடனும் தடுப்புச்சுவர் அமைப்பதாகவும் முழுமையாக அளவீடு செய்து ஓடையை அகலப்படுத்திய பின்னர் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து தற்போது ஓடையின் குறிப்பிட்ட தூரத்துக்கு, மண்மேடுகள் முழுமையாக அகற்றப்பட்டு தூர்வாரும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.

மேலும் உடுமலை நகராட்சி நூற்றாண்டு விழா வளர்ச்சிப்பணிகள் சிறப்புத்திட்டத்தின் கீழ் ரூ.12.97 கோடி தங்கம்மாள் ஓடை மேம்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் தங்கம்மாள் ஓடையை ஒட்டி நடைபாதை அமைக்கவும் தடுப்புச்சுவர் கட்டவும் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது.   
Tags:    

Similar News