செய்திகள்
கோப்புபடம்

மக்களை தேடி மருத்துவம் திட்டம்-அவினாசியில் 3,113 பேர் பதிவு

Published On 2021-08-13 09:40 GMT   |   Update On 2021-08-13 09:40 GMT
இப்பணியை மேற்கொள்ள ஊக்கத்தொகை அடிப்படையில் 25 தன்னார்வ செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அவிநாசி:

அரசின் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி வட்டம்  வெள்ளோட்ட அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டது. சேவூர், அவிநாசி, நம்பியாம்பாளையம், துலுக்கமுத்தூர், திருமுருகன்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு உட்பட்ட  25 துணை சுகாதார நிலையங்கள் சார்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இப்பணியை மேற்கொள்ள ஊக்கத்தொகை அடிப்படையில் 25 தன்னார்வ செவிலியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வீடு, வீடாக செல்லும் இவர்கள்  ரத்த கொதிப்பு சர்க்கரை நோய் மற்றும் நாள்பட்ட நோய்களில் அவதியுறுவோர் குறித்த தகவலை சேகரித்து அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அவர்களை அனுப்பி வைப்பர்.

மருத்துவரின் சிகிச்சைக்குப்பின் டாக்டர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை உட்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.மருந்து, மாத்திரை பலன் தரும் பட்சத்தில்  தொடர்ந்து அவர்களுக்கு மருந்து, மாத்திரை வழங்கி மருத்துவர்கள்  கண்காணிப்பார்கள்.

இத்திட்டத்தில் இதுவரை 3,113 பேர் தங்களை பதிவு செய்து சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்று வருகின்றனர். புதிய நோயாளிகளை அடையாளம் காணும் பணியும் தினமும் மேற்கொள்ளப்படுகிறது என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News