உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

அரசு பள்ளியில் நுண்ணறிவுத்திறன் ஆய்வகம்

Published On 2021-12-28 06:43 GMT   |   Update On 2021-12-28 06:43 GMT
தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆய்வகம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. பல்லடம் கல்வி மாவட்டத்தில் வேறு எந்த பள்ளியிலும் இந்த வசதி கிடையாது.
பல்லடம்:

பல்லடம் மங்கலம் ரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளியில் நுண்ணறிவு திறன் வளர்க்கும் ஆய்வகம் அமைக்கப்பட்டு வருகிறது. 

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறுகையில், 

மத்திய அரசு திட்டத்தின் கீழ் ரூ.12 லட்சம்  செலவில் நுண்ணறிவு திறன் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. 

6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இந்த ஆய்வகத்தின் மூலம் கற்றுக்கொண்டு பயன்பெறலாம். ரோபோடிக்ஸ், விஞ்ஞானம், சென்சார் உள்ளிட்டவை குறித்து ஆய்வகத்தில் கற்றுத்தரப்படும். இதற்காக கணினி வசதி, புரொஜெக்டர் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப கருவிகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆய்வகம் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. பல்லடம் கல்வி மாவட்டத்தில் வேறு எந்த பள்ளியிலும் இந்த வசதி கிடையாது. மாணவர்களின் உயர் படிப்புக்கு இந்த ஆய்வகம் பெரிதும் உதவியாக இருக்கும். இந்த ஆய்வகம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது  என்றனர். 

மத்திய அரசுத் திட்டத்தில் கட்டப்பட்ட இந்த ஆய்வகம் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயரை குறிப்பிடும் வகையில், ‘அடல் டிங்கர்’ ஆய்வகம் என பெயரிடப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News