ஆன்மிகம்
முருகனுக்கு சிறப்பு வழிபாடு

ஆடி கிருத்திகையையொட்டி முருகனுக்கு சிறப்பு வழிபாடு

Published On 2020-08-13 05:22 GMT   |   Update On 2020-08-13 05:22 GMT
நெல்லிக்குப்பம் அடுத்த கீழ் பட்டாம்பாக்கத்தில் பிரசித்திபெற்ற வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
நெல்லிக்குப்பம் அடுத்த கீழ் பட்டாம்பாக்கத்தில் பிரசித்திபெற்ற வள்ளி, தேவசேனா சமேத சிவசுப்ரமணியர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடி கிருத்திகையையொட்டி நேற்று வள்ளி, தேவசேனா சமேத சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பால், பன்னீர், சந்தனம், விபூதி, இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, சந்தன காப்பு அணிவிக்கப்பட்டது. அதன்பிறகு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து கோவில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் கொரோனாவை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளியை கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் நெல்லிக்குப்பம் மீனாட்சி ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் உள்ள முருகர், நெல்லிக்குப்பம் கடைவீதி வரசித்தி விநாயகர் கோவிலில் உள்ள முருகர் மற்றும் மேல்பட்டாம்பாக்கம் வள்ளி, தேவசேனா சுப்பிரமணியர், வேலுடையான்பட்டு முருகன் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
Tags:    

Similar News