செய்திகள்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜெகன்மோகன் ரெட்டி துலாபாரம் கொடுத்த காட்சி

திருப்பதியில் துலாபாரம் கொடுத்து வழிபட்ட ஜெகன்மோகன் ரெட்டி

Published On 2021-10-12 05:26 GMT   |   Update On 2021-10-12 05:26 GMT
திருப்பதி வந்த ஜெகன்மோகன் ரெட்டி புதுப்பிக்கப்பட்ட அலிபிரி நடைபாதை, கோமந்திரம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
திருப்பதி:

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. 5-வது நாளான நேற்று இரவு முக்கிய நிகழ்வான கருடசேவை நடந்தது. இதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன்ரெட்டி கலந்துகொண்டு ஏழுமலையானுக்கு பட்டு வஸ்திரங்களை சமர்பித்து தரிசனம் செய்தார்.

6-வது நாளான இன்று காலை அனுமந்த வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார். இரவில் கஜ வாகனத்தில் அருள்பாலிக்கிறார்.

திருப்பதி வந்த ஜெகன்மோகன் ரெட்டி முன்னதாக புதுப்பிக்கப்பட்ட அலிபிரி நடைபாதை, கோமந்திரம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

அதைத் தொடர்ந்து கோவிலுக்கு வந்த அவர் கருடசேவையை தரிசனம் செய்து ஏழுமலையானுக்கு நேர்த்தி கடனாக எடைக்கு எடை அரிசி துலாபாரம் செய்தார்.

வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் தங்கள் எடைக்கு எடை வெல்லம், அரிசி அல்லது பிற தானியங்களை துலாபாரமாக வழங்குவர். பாரம்பரியமாக இது உள்ளது. திருப்பதியில் ஜெகன்மோகன் ரெட்டி துலாபாரத்தில் தனது எடைக்கு நிகராக 78 கிலோ அரிசியை வழங்கினார்.

திருப்பதியில் நேற்று 20,850 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 10,424 பேர் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.45 கோடி உண்டியல் வசூலானது.
Tags:    

Similar News