ஆன்மிகம்
புனித சந்தியாகப்பர்

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

Published On 2021-07-16 03:15 GMT   |   Update On 2021-07-16 03:15 GMT
கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை.
ஸ்ரீவைகுண்டத்தில் குருசுகோயில் என்றழைக்கப்படும் புனித சந்தியாகப்பர் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. காலை 5.30 மணிக்கு திருப்பலி நடக்கிறது.

மாலை 6.30 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் சிறப்பு கொடிகளை மந்திரித்து பங்குதந்தை கிஷோக் கொடியேற்றி வைக்கிறார். பின்னர் சிறப்பு ஆசிர்வாத நிகழ்வு நடைபெறுகிறது. இரவு 7 மணிக்கு சிறப்பு திருப்பலி நடத்துகிறார். கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்த ஆண்டிற்கான திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லை.

இணையதளத்தில் கொடியேற்ற நிகழ்வுகள் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்படு கிறது. ஆலயத்திருத்தேர் திருவிழா நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளது.26-ந்தேதி காலை கொடியிறக்க நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News