செய்திகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் -முதல்வர் தலைமையில் நாளை ஆலோசனை

Published On 2021-07-15 11:48 GMT   |   Update On 2021-07-15 11:48 GMT
நாளை நடைபெறும் கூட்டத்தில், உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு, வருகிற 19-ந்தேதியுடன் முடிவடைகிறது. தற்போது கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ள நிலையில், 19ம் தேதிக்கு பிறகு தளர்வுகள் மேலும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசிக்க உள்ளார். இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், பொதுத்துறை, வருவாய்த்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.

பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க தற்போது தடை உள்ளது. நாளை நடைபெறும் கூட்டத்தில், உயர் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகள், அனைத்து மதுக்கூடங்கள் மற்றும் நீச்சல் குளங்களை திறப்பது குறித்தும் பேசப்படலாம்.
Tags:    

Similar News