தொழில்நுட்பம்
நோக்கியா

நீண்ட பேட்டரி பேக்கப், டூயல் ஸ்பீக்கர்கள் கொண்ட நோக்கியா 5310 இந்திய வெளியீடு அறிவிப்பு

Published On 2020-06-12 08:24 GMT   |   Update On 2020-06-12 08:24 GMT
நீண்ட பேட்டரி பேக்கப், டூயல் ஸ்பீக்கர்கள் கொண்ட நோக்கியா நிறுவனத்தின் புதிய நோக்கியா 5310 மொபைல் போன் இந்திய வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 5310 பீச்சர் போன் மாடலின் இந்திய வெளியீட்டை உணர்த்தும் டீசர்களை வெளியிட்டது. தற்சமயம் இதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

சர்வதேச சந்தையில் மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 5310 பீச்சர் போனில் எம்பி3 பிளேயர், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ, டூயல் முன்புற ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்தியாவில் நோக்கியா 5310 ஜூன் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



நோக்கியா 5310 சிறப்பம்சங்கள்

- 2.4 இன்ச் 320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே2ஜி
- எம்டி6260ஏ பிராசஸர்
- 8 எம்பி ரேம், 16 ஜிபி மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- சிங்கிள் / டூயல் சிம்
- சீரிஸ் 30 பிளஸ் ஒஎஸ்
- விஜிஏ பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ
- 2ஜி, ப்ளூடூத் 3.9, மைக்ரோ யுஎஸ்பி

நோக்கியா 5310 வைட் மற்றும் ரெட், பிளாக் மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. சர்வதேச சந்தையில் இதன் விலை 44 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3330 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News