செய்திகள்
தேவேந்திர பட்னாவிஸ்

மத்திய அரசுக்கு எந்த நிதியையும் அனுப்பவில்லை - அனந்த்குமார் ஹெக்டே கருத்துக்கு பட்னாவிஸ் விளக்கம்

Published On 2019-12-02 09:11 GMT   |   Update On 2019-12-02 09:13 GMT
40 ஆயிரம் கோடி ரூபாயை காப்பாற்றுவதற்காகவே அவசரகதியில் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றதாக கூறிய மத்திய முன்னாள் மந்திரியின் கருத்துக்கு தேவேந்திர பட்னாவிஸ் விளக்கம் அளித்துள்ளார்.
மும்பை:

மகாராஷ்டிரா முதல் மந்திரியின் கட்டுப்பாட்டில் இருந்த 40 ஆயிரம் கோடி ரூபாயை காப்பாற்றி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்புவதற்காகவே சட்டசபையில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலம் இல்லாதது தெரிந்திருந்தும் ஒரு நாடகம் நடத்தி தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டதாக மத்திய முன்னாள் மந்திரியும் பாஜக எம்.பி.யுமான அனந்த்குமார் ஹெக்டே பேசியிருந்தார்.



அவரது கருத்தை மறுத்துள்ள தேவேந்திர பட்னாவிஸ் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.

அவரது கருத்து முற்றிலும் தவறானது. இதை நான் முழுமையாக மறுக்கிறேன். புல்லட் ரெயில் திட்டப் பணிகளை மத்திய அரசை சேர்ந்த ஒரு நிறுவனம் நிறைவேற்றி வருகின்றது. இதற்காக நிலம் ஆர்ஜிதம் செய்வது மட்டுமே மகாராஷ்டிரா அரசின் பணியாகும்.

எங்களிடம் மத்திய அரசு எந்த நிதியையும் திருப்பி அனுப்புமாறு கேட்கவில்லை. நாங்களும் அனுப்பி வைக்கவில்லை என நாக்பூர் நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பட்னாவிஸ் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News