லைஃப்ஸ்டைல்
தியானம்

தியானம் செய்வதற்கு மிகச் சரியான நேரம்

Published On 2020-06-03 06:31 GMT   |   Update On 2020-06-03 06:31 GMT
நீங்கள் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கான நேரம் வரவேண்டும் என்று காத்துக் கொண்டு இருப்பதை விட நீங்கள் தயாராக இருக்கும் பொழுதே நீங்கள் செய்ய வேண்டிய வேலையை ஆரம்பித்து விடுவது மிகவும் நல்லது.
தியானம் என்பது இப்பொழுது நம் அனைவருக்கும் மிகவும் அவசியமாகிவிட்டது. நம் பரபரப்பான வாழ்க்கை சூழலில் மன அழுத்தம் அதிகரித்து பலவிதமான நோய்களுக்கு நாம் வரவழைத்துக் கொண்டு உள்ளோம். இந்த நோய்களிலிருந்து நம்மை காப்பாற்ற ஆரோக்கியமான உணவுமுறை மற்றும் போதாது. நல்ல மனநிலையும் வேண்டும். நல்ல மனநிலை கிடைப்பதற்கு நிச்சயமாக மனதை ஒருநிலைப்படுத்தி தினமும் தியானம் செய்து வருவது மிகுந்த பலனை அளிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. தினமும் குறைந்தபட்சம் 20 நிமிடம் முதல் அரை மணி நேரமாவது நாம் தியானம் செய்வது நம் வாழ்க்கை முறையிலேயே மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவரும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

நீங்கள் இதை செய்வதற்கு பெரிய முதலீடுகளை, செலவுகளை செய்ய வேண்டிய அவசியங்கள் ஏதும் இல்லை. நீங்கள் இதை செய்வதற்கு உங்கள் பரபரப்பான வாழ்க்கை நாட்களில் சில நேரங்களில் அதற்கு ஒதுக்குவது தான் உங்களது மிகப்பெரிய முதலீடாக உள்ளது. இரவில் அதிக நேரம் விழித்திருக்கக் காலையில் சீக்கிரம் எழுந்து தியானம் உடற்பயிற்சி போன்ற விஷயங்களில் ஈடுபடுவது உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நிச்சயமாக பலன் அளிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. பணம் எப்படி உங்கள் எதிர்காலத்திற்கு மிகவும் பெரிய அளவில் உதவும் என்று நீங்கள் நம்புகிறீர்களோ அதற்கு ஈடான ஒரு பலனை தியானம் உடற்பயிற்சி ஆரோக்கியமான உணவு போன்ற இவை மூன்றும் உங்களுக்கு மிகப்பெரிய பலன் அளிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

சொல்லப்போனால் பணம் எப்போது வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆரோக்கியமான உடலை வயதான பின்பு நாம் பெற்று விடமுடியாது. இப்பொழுது இருந்தே அதை நாம் பின்பற்றிக் கொண்டு வரவேண்டும். மனநிலையும் அதேபோன்றுதான் நல்ல மனநிலை இருந்தால் தான் பணம் சம்பாதிப்பதற்கு வேலை செய்வதற்கும் உதவிகரமாக இருக்கும். மனநிலையைக் கெடுத்துக் கொண்டு விட்டால் நிச்சயமாக பல பிரச்னைகளில் கொண்டுபோய் விடும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

உலகம் முழுவதுமுள்ள பல விதமான தியானப் பயிற்சியாளர்களும் கூறுவது என்னவென்றால், சூரியன் உதிப்பதற்கு சரியாக இரண்டரை மணி நேரத்திற்கு முன்பு தியானத்தை ஆரம்பித்துவிட வேண்டும் என்று கூறுகிறார்கள். சூரியன் பூமியைப் பார்த்து 60 டிகிரி கோணத்தில் இருக்கிறது. அப்பொழுது அதிகமான சக்தியானது பூமிக்கு கிடைக்கும். இது போன்ற நேரங்களில் ஆன்மீக விஷயங்களில் ஈடுபடுவது மிகவும் சக்தி அளிக்கும் என்று கூறுகிறார்கள். காலை 4 மணி முதல் 6 மணி வரை உள்ள நேரம் ஆனது மிகவும் அற்புதமான நேரம் என்று கூறுகிறார்கள். இந்த அற்புதமான நேரம் உங்களது சக்தியை இந்த பிரபஞ்சத்தோடு இணைத்துக் கொள்வதற்கு எந்தவித தடையும் இல்லாத அருமையான நேரம் என்று குறிப்பிடுகிறார்கள்.

இந்த தியானத்தின் அபரிதமான சக்தி என்பது உங்களுக்கு முழுதாக கிடைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் காலை சூரிய உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும் என்பது முக்கியமான விஷயம் ஆக அமைந்து உள்ளது. காலை பலபேரும் சூரியன் உதிக்கும் முன்பு எழுந்து இருப்பதே கிடையாது. நிச்சயமாக சூரியன் உதயத்திற்கு முன்பு நாம் எழுந்திருக்க வேண்டியது கட்டாயமாக மாறிவிட வேண்டும்.

அதற்கான பயிற்சியை கொஞ்சம் கொஞ்சமாக நாம் கொண்டுவர வேண்டும். காலை மிகவும் சீக்கிரமாக எழுந்து விட்டு, காலை கடன்களை முடித்து விட்டு, உடற்பயிற்சி செய்து, அதன் பின்னர் நீங்கள் தியானத்தில் ஈடுபடும் பொழுது, அந்த தியானத்தின் சக்தியானது மிகவும் அதிகமாக இருக்கும். உங்கள் மன நிலைக்கும் ஆத்ம நிம்மதிக்கு மிகப்பெரிய ஊன்றுகோலாக இருக்கும் என்று கூறுகிறார்கள். குறைந்தபட்சம் 15 நிமிடமாவது நீங்கள் தியானத்தில் ஈடுபடவேண்டும். அதிகமான உடற்பயிற்சி செய்து பின்பு 15 நிமிடம் அமைதியான சூழலில் தானத்தில் ஈடுபடுவது என்பது நிச்சயம் உங்கள் உடல்நிலை உங்கள் தசை மற்றும் உங்கள் மனநிலையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது எந்த மாற்றமும் இல்லை.
Tags:    

Similar News