செய்திகள்
கொரோனா வைரஸ்

மகாராஷ்டிராவில் முதியோர் இல்லத்தில் 60 பேருக்கு கொரோனா

Published On 2021-11-29 02:00 GMT   |   Update On 2021-11-29 02:00 GMT
முதியோர் இல்ல ஊழியர்கள் 5 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளான முதியவர்கள் 2 டோஸ் தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தானே :

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் சோர்கான் பகுதியில் உள்ள முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியவர்கள் 2 பேருக்கு சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் அதில், ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து அந்த முதியோர் இல்லத்தில் தங்கி உள்ள மற்ற முதியவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மொத்தம் 109 பேருக்கு நடத்திய பரிசோதனையில் 55 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

அதேபோல முதியோர் இல்ல ஊழியர்கள் 5 பேருக்கும் கொரோனா
தொற்று ஏற்பட்டுள்ளது. அதேபோல ஊழியர்களின் உறவினர்களுக்கு நடத்திய பரிசோதனையில் 1½ வயது குழந்தைக்கும், கர்ப்பிணி ஒருவருக்கும் தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரும் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா தொற்றுக்கு ஆளான 55 முதியவர்களும் 2 டோஸ் தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News