லைஃப்ஸ்டைல்
சோர்வை போக்கி முகத்தை பொலிவாக்கும் வீட்டு குறிப்புகள்

சோர்வை போக்கி முகத்தை பொலிவாக்கும் வீட்டு குறிப்புகள்

Published On 2019-09-05 03:58 GMT   |   Update On 2019-09-05 03:58 GMT
வேலை பளு காரணமாக முகத்தில் ஏற்படும் சோர்வை போக்கும் கிரீம்களை வாங்க கடைக்கு போவதற்கு முன்பு உங்கள் வீட்டு சமையலறைக்கு செல்லுங்கள். அங்கேயே அதற்கான தீர்வுகள் இருக்கின்றன.
தொடர்ச்சியான வேலை காரணமாக நமது தோற்றப்பொலிவை கவனிக்காமல் விடும்போது, அழுத்தம் காரணமாக முகம் சோர்வடைந்து அந்த சோர்வு நிரந்தரமாகத் தங்கிவிட்டதைப் போன்ற ஒரு தோற்றம் தரும். சோர்வான முகத்தை கண்ணாடியில் பார்க்கும் நாம் உடனடியாக அதை போக்க நிச்சயமாக ஏதாவது ஒரு கிரீமை வாங்கி அப்ளை செய்ய கடைக்கு செல்வோம் இல்லையா. அப்படி கிரீம்களை வாங்க கடைக்கு போவதற்கு முன்பு கொஞ்ச நேரம் உங்கள் வீட்டு சமையலறைக்கு செல்லுங்கள். அங்கேயே அதற்கான தீர்வுகள் இருக்கின்றன.

* முட்டைகோஸ் சரும பிரச்னைகளுக்கு பலனளிக்க கூடியது. முட்டைகோஸில் வைட்டமின் ஏ, சி, டி ஆகிய மூன்று வைட்டமின்கள் உள்ளன. இந்த மூன்று வைட்டமின்களும் சருமத்தை இளமையாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகின்றன. உங்களுடைய முகம் உடனடியாக பொலிவடைய வேண்டுமா கவலையே படாதீர்கள், முட்டைகோஸை தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். பின்னர் அதை வடிகட்டி அந்த தண்ணீரில் உங்கள் முகத்தை கழுவுங்கள். பிறகு நீங்களே உணர்வீர்கள் உங்கள் முகத்தின் பளபளப்பை.

* வீட்டில் உள்ள தயிரில் இருக்கிற லாக்டிக் அமிலம் வறண்ட சருமத்தை ஈரமாக்கி சருமத்தில் உள்ள நுண் துளைகளை இறுக்கி இளமையான பிரகாசத்தை அளிக்கிறது. அதை எப்படி அப்ளை செய்வது என்றால், ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை எடுத்துக்கொள்ளுங்கள். மூன்று தேக்கரண்டி தயிர் எடுத்துக்கொள்ளுங்கள். அதை நன்றாக கலந்து உங்கள் முகத்தில் தடவுங்கள். அது உலர ஆரம்பித்ததும் வெதுவெதுபான தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். பிறகு உங்கள் முகம் புத்துணர்ச்சியுடன் இருப்பதை உணர முடியும்.

* தேங்காய் பால் சரும அடுக்குகளில் உள்ள டெட் செல்களை நீக்கும் ஒரு மிகப்பெரிய சரும பாதுகாப்பு நிவாரணி. அரை கப் தேங்காய் பால் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் பாதியை முகம் மற்றும் உடல் மீது தடவவும். மீதமுள்ளவற்றை சிவப்பு சந்தனப் பவுடருடன் பசை போல கலந்து உங்கள் முகத்தில் தடவுங்கள். இதை உடல் முழுவதும் கூட தடவலாம். இது உங்களுடைய சருமத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும்.

* ஆப்பிள் சைடர் வினிகர் முகத்திலிருந்து நச்சுகளை அகற்றுகிறது. அதனால், நீங்கள் உங்களுடைய முகத்தில் இளமையான பிரகாசத்தை பெற முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை ரோஸ்வாட்டருடன் கலந்து சருமத்தில் தடவி பத்து நிமிடங்கள் உலர விடவும். பின்னர், அதை சாதாரண தண்ணீரில் கழுவிவிடுங்கள். பிறகு கண்ணாடியைப் பாருங்கள் உங்கள் முகத்தில் இளமையான பிரகாசம் வெளிப்படுவதை உணர முடியும்.
Tags:    

Similar News