செய்திகள்
கோப்புப்படம்

அத்திக்கடவு திட்டத்தில் விடுபட்ட குளங்கள் இணைப்பு- போராட்டக்குழு முதல்வருக்கு மனு

Published On 2021-07-22 08:52 GMT   |   Update On 2021-07-22 08:52 GMT
பெருந்துறை முதல் அன்னூர் பகுதி வரை அத்திக்கடவு &அவிநாசி வரையிலான திட்டத்தில் பல குட்டைகள் விடுபட்டுள்ளன.
அவிநாசி:

பெருந்துறை முதல் அன்னூர் பகுதி வரை அத்திக்கடவு -அவிநாசி வரையிலான திட்டத்தில் பல குட்டைகள் விடுபட்டுள்ளன. 

திருப்பூர், ஈரோடு, கோவை மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையான அத்திக்கடவு - அவிநாசி திட்டப்பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. 

இத்திட்டத்தில் 1,500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊர் திரும்பிய நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளனர்.

இத்திட்டத்தில் விடுபட்ட குளம், குட்டைகளை இணைக்க வேண்டுமென  போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளார். 

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பெருந்துறை முதல் அன்னூர் பகுதி வரை அத்திக்கடவு -அவிநாசி வரையிலான திட்டத்தில் பல குட்டைகள் விடுபட்டுள்ளன. விடுபட்ட குட்டை தொடர்பான ஆய்வுப்பணி பொதுப்பணித்துறையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் விடுபட்ட குட்டைகளை இணைத்து தண்ணீர் கிடைக்க போர்க்கால அடிப்படையில்  நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அரசாணை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதிகாரிகள் சிலர் கூறுகையில், பல இடங்களில் இருந்தும் விடுபட்ட குளம், குட்டை தொடர்பான விவரங்களை விவசாயிகள், பொதுமக்கள் தொடர்ந்து அனுப்பி வருகின்றனர். அதனடிப்படையில் கள ஆய்வு நடத்தி வருகிறோம் என்றனர்.
Tags:    

Similar News