செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

சென்னையில் 1,089 பேர், கோவையில் 642 பேருக்கு புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக இன்றைய விவரம்

Published On 2020-09-24 16:50 GMT   |   Update On 2020-09-24 16:50 GMT
தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 692 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா தொற்று குறித்த நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் புதிதாக 5,692 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 63 ஆயிரத்து 691 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 66 பேர் உயிரிழந்தனர். இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 9,076 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று ஒரே நாளில் 5,470 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 5,08,210 ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை 46 ஆயிரத்து 405 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உள்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 66 மற்றும் தனியார் சார்பாக 112 என, 178 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன.

சென்னையில் அதிகபட்சமாக 1,089 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 59 ஆயிரத்து 683 ஆக உயர்ந்துள்ளது. சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4,603 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட இன்றைய மாதிரிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்து 607. இதுவரை 68,15,644 பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் இன்றைய எண்ணிக்கை 88 ஆயிரத்து 784. இதுவரை பரிசோதிக்கப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 66,08,675  என தெரிவித்துள்ளது.

மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

அரியலூர்      28
செங்கல்பட்டு   299
சென்னை      1,089
கோயம்புத்தூர்   642
கடலூர்      250
தருமபுரி      129
திண்டுக்கல்   45
ஈரோடு      138
கள்ளக்குறிச்சி   42
காஞ்சிபுரம்   196
கன்னியாகுமரி   61
கரூர்      61
கிருஷ்ணகிரி   86
மதுரை      69
நாகப்பட்டினம்   46
நாமக்கல்      132
நீலகிரி      97
பெரம்பலூர்   21
புதுகோட்டை   112
ராமநாதபுரம்   16
ராணிப்பேட்டை   98
சேலம்      311
சிவகங்கை      41
தென்காசி      55
தஞ்சாவூர்      190
தேனி      65
திருப்பத்தூர்   68
திருவள்ளூர்   265
திருவண்ணாமலை   120
திருவாரூர்      143
தூத்துக்குடி      38
திருநெல்வேலி   115
திருப்பூர்      188
திருச்சி      126
வேலூர்      126
விழுப்புரம்      146
விருதுநகர்      32
விமான நிலையத்தில் தனிமை   0
உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை   6
ரயில் நிலையத்தில் தனிமை   0
Tags:    

Similar News