செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

திருவாரூர் அருகே பயிர் காப்பீட்டு தொகை கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2019-09-29 16:23 GMT   |   Update On 2019-09-29 16:23 GMT
திருவாரூர் அருகே பயிர் காப்பீட்டு தொகை கேட்டு கிராம மக்கள் கீழச்சேரி பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே கண்டமங்கலம் வருவாய் கிராமத்தில் 417 ஹெக்டேர் நிலத்தில் 1500 விவசாயிகள் நெல் சாகுபடி செய்திருந்தனர். இதற்காக மழவராயநல்லூர் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2018-19க்கான பயிர் காப்பீடுத் திட்டத்தில் பதிவு செய்திருந்தனர்.

கண்டமங்கலம் கிராமத்தில் நெல் பயிர்கள் கஜா புயலில் சேதமடைந்தது. பாதிக்கப்பட்ட சுற்று வட்டார கிராமங்களுக்கு பயிர் காப்பிட்டு தொகை கிடைத்தது. ஆனால் கண்டமங்கலம் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து கோட்டூர் வேளாண்மை அலுவலரிடம் விவசாயிகள் சென்று கேட்டும் சரியான பதில் கிடைக்க வில்லை. இதே போன்று 2017- 18 ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையும் இந்த விவசாயிகளுக்கு இதுவரை கிடைக்கவில்லை. கோட்டூர் வேளாண்மை அலுவலர்களின் அலட்சிய போக்கால் தொடர்ந்து இந்த பகுதி விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் மன்னார்குடி-திருத் துறைப்பூண்டி சாலையில் கீழச்சேரி பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த கோட்டூர் இன்ஸ்பெக்டர் அறிவழகன் மற்றும் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து மறியலை கைவிட்டு விவசாயிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News