உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

சுக்கம்பாளையத்தில் நீரோடையில் கொட்டப்படும் குப்பைகள்

Published On 2022-04-16 10:50 GMT   |   Update On 2022-04-16 10:50 GMT
நீரோடையில் குப்பைகளை போடாமல் தடுத்து குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ளது சுக்கம்பாளையம் ஊராட்சி. இங்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சுக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள நீரோடையில் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

மேலும் குப்பைகள் குவிந்து கிடப்பதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் நிலை உள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட பாலித்தீன் கவர்கள் குப்பைகளுடன் சேர்ந்து குவிந்து கிடக்கிறது. 

இதுகுறித்து தன்னார்வலர்கள் கூறுகையில்:

சுக்கம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே உள்ள நீரோடையில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இதை ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லை. மேலும் குப்பைத் தொட்டிகளை முறையாக பராமரிக்காமல் அலட்சியம் காட்டப்படுவதால் குப்பைகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. 

மேலும் அதிக அளவில் குப்பைகள் சேர்ந்துவிட்டால் அதை அப்புறப்படுத்தாமல் தீ வைத்து எரிக்கப்படுகிறது. இதனால் புகை மண்டலம் ஏற்பட்டு பொதுமக்கள் சுவாசிக்க அவதிப்படுகின்றனர். எனவே நீரோடையில் குப்பைகளை போடாமல் தடுத்து குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News