செய்திகள்
மோடியுடன் பூட்டான் பிரதமர்

மெகா தடுப்பூசி திட்டத்தை தொடங்கியது இந்தியா- பூட்டான் பிரதமர் வாழ்த்து

Published On 2021-01-16 08:56 GMT   |   Update On 2021-01-16 08:56 GMT
இந்தியாவில் மெகா தடுப்பூசி திட்டத்தை அறிமுகம் செய்தமைக்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டம் இந்தியாவில் இன்று தொடங்கியது. இந்த மெகா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி இன்று துவக்கி வைத்தார். இதையடுத்து, நாடு முழுவதும் 3006 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெறுகிறது. முதல் கட்டமாக கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 

முதற்கட்டமாக 3 கோடி பேருக்கும், 2வது கட்டத்தில் 30 கோடி பேருக்கும் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிக்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்கும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி போடும் இந்த மைல்கல் திட்டத்தை அறிமுகம் செய்தமைக்காக பிரதமர் மோடி மற்றும் இந்திய மக்களுக்கு பூட்டான் பிரதமர் லோட்டே ஷெரிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். தொற்றுநோயினால் சந்தித்த அனைத்து துயரங்களையும் தணிக்கும் வகையில், இந்த தடுப்பூசி திட்டம் அமையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

வாழ்த்து தெரிவித்த பூட்டான் பிரதமருக்கு இந்திய பிரதமர் மோடி நன்றி தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

‘இவ்வளவு குறுகிய காலத்தில் சாத்தியமற்றது என்று முன்னர் நம்பப்பட்ட ஒரு தடுப்பூசி யதார்த்தமாகிவிட்டது. நமது விஞ்ஞானிகள், மருத்துவர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் முயற்சிகளுக்கு நன்றி. ஆரோக்கியமான பூமியை உருவாக்க, முடிந்த அனைத்தையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது’ என்றும் மோடி கூறி உள்ளார்.
Tags:    

Similar News