ஆன்மிகம்
தோரக்ரந்தி பூஜை

தோரக்ரந்தி பூஜை எதற்காக செய்யப்படுகிறது

Published On 2020-09-04 09:51 GMT   |   Update On 2020-09-04 09:51 GMT
வரலட்சுமி தினத்தன்று செய்யப்படும் பூஜைக்கு தோரக்ரந்தி பூஜை என்று பெயர். இந்த பூஜை செய்வதற்கான காரணத்தை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
மகாலட்சுமியை அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறார்கள். இந்த அஷ்ட லட்சுமிகள் தான் நமக்கு எட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குகிறார்கள். இந்த அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் உள்ளதாக சாஸ்திரம் சொல்கிறது.

எனவே வரலட்சுமி பூஜை தினத்தன்று ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை பூஜையில் வைத்து வழிபட வேண்டும். இந்த பூஜை தோரக்ரந்தி பூஜை என்று அழைக்கப்படுகிறது. இந்த பூஜையில் மிகவும் முக்கியமானது தோரக்ரந்தி எனப்படும் சரடுக்குச் செய்யும் பூஜை.

ஓம் கமலாயை நம:
ஓம் ரமாயை நம:
ஓம் லோக மாத்ரே நம:
ஓம் விச்’வ ஜநந்யை நம:
ஓம் மஹாலட்சுமியை நம:
ஓம் க்ஷீராப்தி தநயாயை நம:
ஓம் விச்வஸாக்ஷிண்யை நம:
ஓம் சந்தரசோதர்யை நம:
ஓம் ஹரிவல்லபாயை நம:

என்னும் ஒன்பது நாமங்களைச் சொல்லி பூஜை செய்ய வேண்டும். பின்பு வரலட்சுமி தேவியை வணங்கிவிட்டுக் கையில் சரடு கட்டிக்கொள்ள வேண்டும். சரடை வலது கையில் கட்டிக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் மூத்த பெண்கள், மாமியாரிடம் கட்டிக்கொள்வது விசேஷம். தனிக்குடித்தனத்தில் இருப்பவர்கள் கணவன் கையால் கட்டிக் கொள்ளலாம்.
Tags:    

Similar News