உள்ளூர் செய்திகள்
அம்பேத்கர் ரதயாத்திரை ஊர்வலம்.

அம்பேத்கர் ரத யாத்திரை

Published On 2022-04-15 10:11 GMT   |   Update On 2022-04-15 10:11 GMT
திருப்பனந்தாளில் அம்பேத்கர் ரத யாத்திரை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

கும்பகோணம்:

திருப்பனந்தாளில் நீலப்புலிகள் இயக்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சமத்துவ நாள் விழாவாக கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து திருப்பனந்தாள் அருகே தத்துவாஞ்சேரியிலிருந்து 

அம்பேத்கர் ரத யாத்திரை முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு திருவாய்பாடியில் வைத்து அம்பேத்கர்சிலைக்கு நீலப்புலிகள் இயக்கம் தலைவர் இளங்கோவன் தலைமையில் மாலை 

அணிவித்து மரியாதை செலுத்தினர்.நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் மணிசேகரன், மாநிலத் துணைத் தலைவர் ரமேஷ், மாவட்டச் செயலாளர் ராஜா, ஆலோசனைக் குழுக்கள் காசிநாதன், ரவி, 

சீத்தாராமன், மாவட்ட தலைவர் காமராஜ், துணைத் தலைவர் மேகநாதன், விடுதலை சிறுத்தை கட்சி மண்டல செயலாளர் விவேகானந்தன், தொகுதி செயலாளர் முல்லைவளவன் மற்றும் நிர்வாகிகள், 

பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு பேனா புத்தகங்கள் வழங்கப்பட்டன. 

அதனைத் தொடர்ந்து திருவாய்பாடியில் அம்-பேத்கர் வெண்கல சிலை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
Tags:    

Similar News