செய்திகள்
பஞ்சலிங்க அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.

ஆர்ப்பரிக்கும் பஞ்சலிங்க அருவி-சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

Published On 2021-06-08 09:38 GMT   |   Update On 2021-06-08 11:56 GMT
உடுமலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் நிலையில் ஊரடங்கால் தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
உடுமலை:

உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு மேல் குருமலை, கீழ் குருமலை, குழிப்பட்டி பகுதியில் உற்பத்தியாகின்ற கொட்டையாறு, பாரப்பட்டியாறு குருமலைஆறு, கிழவிப்பட்டி ஆறு, உப்புமண்ணபட்டி ஆறு உள்ளிட்டவை நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும்போது ஆறுகளில் நீர் வரத்து ஏற்படுகிறது.

ஆறுகள் வனப்பகுதியில் பல்வேறு விதமாக பிரிந்து ஓடினாலும் இறுதியில் பஞ்சலிங்க அருவியில் ஒன்று சேர்ந்து விடுகின்றது. இதனால் அருவியில் ஒருமுறை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் சுமார் 6 மாத காலத்திற்கு நிலையான நீர்வரத்து ஏற்படும் சூழல்  ஏற்படும்.

தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அருவியில் குளிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். 
Tags:    

Similar News