செய்திகள்
ரெம்டெசிவிர் மருந்து

ரெம்டெசிவிர் மருந்துக்கான இறக்குமதி வரி ரத்து - மத்திய அரசு அறிவிப்பு

Published On 2021-04-20 20:21 GMT   |   Update On 2021-04-20 20:21 GMT
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் ஊசி மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புதுடெல்லி:

கொரோனா தொற்று சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் மருந்து பயன்படுத்தப்படுகிறது. அந்த மருந்தின் விலையை மருந்து கம்பெனிகள் அதிக விலைக்கு விற்பதாக புகார் எழுந்தது.
 
மத்திய அரசின் தலையீட்டை தொடர்ந்து பல்வேறு மருந்து நிறுவனங்கள், ரெம்டெசிவிரின் விலையை கணிசமாக குறைத்துள்ளன என மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை மந்திரி மன்சுக் எல்.மான்டவியா டுவிட்டரில் தெரிவித்திருந்தார்.

கடிலா ஹெல்த்கேர் நிறுவனம், டாக்டர் ரெடீஸ் லேப் நிறுவனம், சிப்லா, மைலன், சைன்ஜின் இன்டர்நேஷனல், ஹீட்டரோ ஹெல்த்கேர் ஆகிய மருந்து நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்து விலையை குறைத்தன.

இந்நிலையில், கொரோனா தொற்று சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கான இறக்குமதி வரி ரத்து செய்யப்படுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
Tags:    

Similar News