செய்திகள்
கொரோனா வைரஸ்

விழுப்புரத்தில் இன்று மேலும் 128 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2020-08-14 04:59 GMT   |   Update On 2020-08-14 04:59 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மேலும் 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,034 ஆக அதிகரித்துள்ளது.
விழுப்புரம்:

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 20 ஆயிரத்து 355 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 61 ஆயிரத்து 459 ஆக உயர்ந்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று அதிகமாக உள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இன்று மேலும் 4 காவலர்கள் உள்பட 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,034 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கு இதுவரை 48 பேர் உயிரிழந்துள்ளனர்.


Tags:    

Similar News