லைஃப்ஸ்டைல்
குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு போட வேண்டிய தடுப்பூசிகள்

குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு போட வேண்டிய தடுப்பூசிகள்

Published On 2021-08-24 08:28 GMT   |   Update On 2021-08-24 08:28 GMT
எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லாத் தடுப்பூசிகளையும் குறிப்பிட்ட வயதில் போடமுடிவது இல்லை. சிலருக்கு விதிவிலக்கு உண்டு. குறைப் பிரசவம் / எடை குறைந்த குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசிகளை அறிந்து கொள்ளலாம்.
குழந்தைப் பருவத்தில் ஏற்படும் உயிர்க்கொல்லி நோய்களிலிருந்து பாதுகாக்கத்தான் தடுப்பூசிகளைப் போடுகிறோம். அதேசமயம், எல்லாக் குழந்தைகளுக்கும் எல்லாத் தடுப்பூசிகளையும் குறிப்பிட்ட வயதில் போடமுடிவது இல்லை. சிலருக்கு விதிவிலக்கு உண்டு. இந்த மாதிரியான குழந்தைகளைச் சிறப்புப் பிரிவினரில் வைத்துள்ளது மருத்துவம்.

குழந்தை பிறந்தவுடன் அதன் எடை இரண்டு கிலோவுக்கு அதிகமாக இருக்கிறது எனில், பிறந்தவுடன் போட வேண்டிய எல்லாத் தடுப்பூசிகளையும் போட்டுக்கொள்ளலாம். இதற்கும் குறைவாக எடை உள்ளவர்களுக்கு மட்டும், ஹெபடைட்டிஸ் – பி தடுப்பூசியை ஒரு மாதம் முடிந்த பிறகு போட்டுக்கொள்ளலாம். இவர்களுக்குத் தசை வளர்ச்சிக் குறைவாக இருக்கும் என்பதால், தடுப்பூசி போடுவதற்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படும் ஊசிகளை, இவர்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. ஊசியின் அளவு 24 கேஜ் (Gauge) அல்லது அதற்கும் சிறியதாக இருக்க வேண்டும்.

ஹெபடைட்டிஸ் – பி மஞ்சள் காமாலை உள்ள தாய்க்குப் பிறந்த குழந்தையின் எடை, இரண்டு கிலோவுக்கும் குறைவாக இருந்தால், 12 மணி நேரத்துக்குள் அந்தக் குழந்தைக்கு ஹெபடைட்டிஸ் – பி தடுப்பூசி மற்றும் தடுப்புப் புரதம் போடப்பட வேண்டும். இதைத் தொடர்ந்து இந்தத் தடுப்பூசியை முறையே ஒரு மாதம், இரண்டு மாதங்கள், ஆறு மாதங்கள் என மூன்று தவணைகள் குழந்தைக்குப் போட வேண்டும்.

Tags:    

Similar News