செய்திகள்
கோப்புப்படம்

ரேசன் கடைகள் நாளை முதல் நான்கு மணி நேரம் செயல்படும்: தமிழக அரசு

Published On 2021-05-24 13:25 GMT   |   Update On 2021-05-24 13:25 GMT
தமிழகத்தில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், ரேசன் கடைகளுக்கு மட்டும் தற்போது விலக்கி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி (இன்று) வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால், மக்கள் எந்தவித அச்சமின்றி தெருக்களில் சுற்றித்திரிந்தனர். இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்கான நோக்கம் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது.

இதனால் தமிழக அரசு நேற்றுமுன்தினம் மருத்துவர்களை கொண்ட நிபுணர்கள் குழு, எம்எல்ஏ-க்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தி இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கை அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்தது.

நேற்றிரவு 9 மணியுடன் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. இன்று காலை 6 மணியில் இருந்து முழு ஊரடங்கு அமலுக்கு வந்தது. பால் மற்றும் மெடிக்கல் கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நாளையில் இருந்து ரேசன் கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை செயல்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News